Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள், என்ஜினீயர்கள் உட்பட பலரை கைது செய்தனர்.

இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார். 

0 comments: