Saturday, September 20, 2014
தொழிலாளர் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி
வாகனப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு முடிவு
திருப்பூர், செப்.20-
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சூழலில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய போனஸ் தொகையை அதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வலியுறுத்தி வாகனப் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் நடத்த இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனியன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி.குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்க இருப்பதால் பனியன், விசைத்தறி, சலவை, சுமைப்பணி, கட்டுமானம், இன்ஜினியரிங், கைத்தறி மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் பண்டிகைக்கு 15 தினங்களுக்கு முன்பே உரிய போனஸ் தொகையை வழங்க வேண்டும் என அனைத்து தொழில் சார்ந்த முதலாளிகளையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது.
அதேசமயம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மையங்களில் அக்டோபர் 6ம் தேதி வாகனப் பிரச்சாரம் செய்வது என்றும், அக்டோபர் 7ம் தேதி திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் சிஐடியு முடிவு செய்துள்ளது.
போனஸ் என்பது தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமை என்பதால் அதை உரிய காலத்தில் கேட்டுப் பெற தொழிலாளர்கள் முன்வர வேண்டும். சிஐடியு நடத்தும் போனஸ் தொடர்பான ஆர்ப்பாட்ட இயக்கத்தில் அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
உடுமலை அருகே உள்ள ஸ்ரீராம் நகர் நகரைச்சேர்ந்தவர் கனகராஜ். இவர் உடுமலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம...
-
கதிரம்பட்டி மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த ...
-
விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். வி...
-
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து மௌன ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய சாலை வழி...
-
திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜின...
-
மதுரையை நவீன நரங்கள் பட்டியலில் மதுரையை சேர்த்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு தொழில் வர்த்த...
0 comments:
Post a Comment