Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18.9.2014 அன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட்டு தேர்தலைச் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.9.2014 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு ஆகியவற்றுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 22வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்45வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன்திருமுருகன் பூண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலிலும்திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டு (குண்டடம்) தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதெனவும்உடுமலை ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டுகண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் மற்றும் தளி பேரூராட்சி 5வது வார்டுபல்லடம் நகராட்சி 6வது வார்டு ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இடைதேர்தல் நடைபெறும் மற்ற பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் கூடிப்பேசி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.


     (M.ரவி)                       (K.காமராஜ்)
   மாவட்டச் செயலாளர்       மாவட்டச் செயலாளர்
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

0 comments: