Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் மாணவி மீனா மீது ஆசிட்டை வீசினார். அப்போது மீனாவுக்கும், தடுக்க சென்ற மாணவி அங்காள ஈஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

0 comments: