Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார்.
  மதுரை ரயில் நிலைய பாதுகாப்பு வசதிகளை செவ்வாய்க்கிழமை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை செயல்பாட்டில் உள்ளது.
ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் பொருள்கள் கண்டறிய இது மிகவும் உதவும். ரயில்நிலையத்தின் பிரதான வாசலில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக் கருவியும் பார்சல் பரிசோதனை கருவியும் உள்ளன. தற்போது மேலும் ஒரு பார்சல் ஸ்கேனர் கருவியும் மற்றும் வாகனங்களை அடியில் பரிசோதிக்கும் 2 கருவிகளும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இந்த கருவிகள் விரைவில் நிறுவப்படும். மேலும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்கவைக்கும் நவீன கருவிகளும் வழங்கப்பட உள்ளன என்றார்.
   முன்னதாக அவர் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கருவிகள் செயல்படுவதை பார்வையிட்டார்.
ரயில் நிலையத்தில் மொத்தம் உள்ள 68 சிசிடிவி கேமிராக்களில் 4 காமிராக்கள் செயல்படாமல் உள்ளதை அவர் கண்டறிந்தார். அவற்றை உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து
ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள ஒவ்வொரு வீரரையும் அழைத்து அவர்களது பணிகுறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.

0 comments: