Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by farook press in ,    
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி 40 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் வாபஸ் பெற்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினால் பிடித்து செல்லப்பட்ட 63 படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வேலை நிறுத்தத்திற்கு பின்னரும், படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, படகுகள் விரைவில் மீட்டு தரப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்திருந்தார்.
அமைச்சர் உறுதி அளித்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும், படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இதனிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய- இலங்கை அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் படகுகளை விடுவிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படகுகள் விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி வரும் 1ஆம் தேதி (நாளை) முதல் மீன் பிடிக்க செல்வதாக மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் சங்கத் தலைவர்கள் என்.ஜெ.போஸ், ஜெசுராஜ், சகாயம், எமரிட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்படுகிறது.

0 comments: