Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்ஆகியோர் இரட்டை இலை  சின்னத்திற்கு வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில், சூலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், தொடக்க வேளாண்மை மற்றும் நில வள வங்கி தலைவருமான என்.சி.குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சித்தலைவரும், சோமனூர் நகர செயலாளருமான ஏ.சி.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, கடைவீதி, மார்க்கெட் பகுதி, இருகூர் ரெயில் நிலையம் பகுதி, சந்தைப்பேட்டை பகுதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில்  வீதி, வீதியாக சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் 3 ஆண்டு கால  சரித்திர சாதனைகளை பட்டியலிட்டு எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்களை பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
அவர்களுடன் மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன், வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், சூலூர் ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் அங்கமுத்து, இருகூர் துரைசாமி, இருகூர் 18வது வார்டு கவுன்சிலர் வினோத், கிளை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் தேவராஜ், சின்னத்தம்பி, தங்கவேலு, நடராஜ்,முருகன், ஈஸ்வரன்,  சூலூர் வழக்கறிஞர் பிரபுராம், இருகூர் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் தர்மலிங்கம், நாகராஜ், சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் டி.கந்தசாமி, மாவட்ட இளைஞர் அணி ப.ம.பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ரங்கநாதன், சுல்தான்பேட்டை ஒன்றிய சேர்மன் இந்திராணி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், விஜயகுமார், குமார், சாவித்திரி,மேரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், அம்மா பேரவை தலைவர் ராமசாமி, மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் புனிதா என்கிற பரமேஸ்வரி, லதா, சத்யா,,சுகுணா, ஜெகதீஸ்வரி, செந்தாமரை,சித்ராதேவி உள்ளிட்ட பலர் இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.


0 comments: