Monday, February 24, 2020

On Monday, February 24, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

                

குடியுரிமை திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி போராட்டத்திற்கு அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்

                 
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்திருக்கிறது இது மிகுந்த வேதனை அளிக்கிறது, இத்தகைய வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடி மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக  அறிவிக்க வேண்டும்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாள் என்று அறிவித்திருப்பது வரவேற்கிறோம், ஆனால் இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாளாக அறிவித்தால் மட்டும் போதாது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர் அவர்கள் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது, அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிற உரிமைகளை ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது நகைச்சுவையாக வேடிக்கை கூடிய ஒன்றாகும்

குடிசையிலே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல்  மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது வெட்கக் கேடானது

டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விடுமா என்ற கேள்விதான் எழுப்ப விரும்புகிறேன்

சி ஏ ஏ என்பிஆர் எதிர்ப்பு என்பது மோடி அரசின் எதிர்ப்பு என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் இது இந்து சமூகத்திற்கு எதிராக என்பது பார்ப்பது திசை திருப்பக்கூடிய அரசியலாகும்.

0 comments: