Tuesday, February 25, 2020

On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    

மக்கள் பணத்தில் செயல்படுகிறதா அறம் மக்கள் நல சங்கம் ?
                  

நேற்று சென்னை மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஒர் 7 ஸ்டார் ரெசார்ட்ல் தமிழகம் முழுவதும் உள்ள டாப் லீடர் கள் இக்கூட்டத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர் தகவல் இதற்கு  அறம் மக்கள் நல சங்கம் சார்பில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உள்ளனர். இந்தப் பணம் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது ? இதுதான் அனைத்து பொது மக்களுக்கும் ஓர் மில்லியன் டாலர் கேள்வி? அறம் மக்கள் நல சங்கம் சார்பில் போன மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி தஞ்சையில் இதேபோல் கூட்டம் நடத்தினார்.

தற்போது சென்னையில் அரசுக்கு எதிராக எனக்கூறி தற்போது மாமபல்லபுரத்தில் கூட்டம் நடத்தி உள்ளனர்.. இந்த பணத்துக்கு அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா ( எ ) அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ்குமார் என்கிற ரமேஷ் அவர்களுக்கு வெளிச்சம்.. கோடிக்கணக்கில் செலவு செய்ய வெளிநாட்டிலிருந்து ஏதும் நிதி வருகிறதா என தெரியவில்லை.

 இதை காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறை ஆராய வேண்டும். தமிழகம் முழுவதும் எல்பின் நிறுவனம் சார்பில் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் சென்னை தலைமை இடத்தை தேர்ந்தெடுத்து கூட்டம் நடத்தினார். காவல்துறை டிஜிபி ஐயா அவர்கள்  செயற்குழு பொதுக்குழு என்ற பெயரில் ELFIN நிதி நிறுவனம் நடத்தும் கூட்டத்தை ஆராயவேண்டும்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

0 comments: