Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by farook press   


திருப்பூர்  ஆக 14:


பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டஏ.ஜி . கல்வியியல்கலைக்கல்லூரி     அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்துள்ள அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் கல்லூரி முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கோவை மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் மூக்கையா தலைமையிலான அதிகாரிகள்  நேற்று அக்கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: