Tuesday, February 11, 2020

On Tuesday, February 11, 2020 by Tamilnewstv in ,    

எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் .


எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. இங்கு உள்ளவர்கள் ஏற்கனவே பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது நான் காரைக்குடியில் அந்தோணி செல்வம் என்பவர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த உள்ளார் என்பது குறித்து காரைக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்க வந்துள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை எஸ்பி இடம் அளித்த புகாரின் பேரில் தஞ்சை எல்பின்  பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். தற்போது புதுக்கோட்டையில் மற்றும் தஞ்சாவூரிலும்  ELFIN நிறுவனம் கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. திருச்சியிலும் கூட்டம் நடத்தாமல் இருக்க முயற்சி செய்து வருகின்றேன். திருச்சியில் தொடர்ந்து ELFIN கூட்டம் நடைபெற்று தான் வருகிறது



🏵🏵 *GOLDEN     OPPORTUNITY* 🏵🏵
           
               🙏 🙏 🙏
மிகச்சிறந்த வருமானம் தரும் வாய்ப்பு உங்களுக்காக..👉👉👉
           
🏵ELFIN OPPORTUNITY PROGRAM🏵

நாள்       : *08.02.2020*
கிழமை  : *சனிக்கிழமை*
நேரம்     : மாலை *5.00*
                  மணி *SHARP*
இடம்      : *நந்தனம் ஹால்,*
              ஹோட்டல் ரம்யாஸ்,
                        திருச்சி.
* சிறப்பு விருந்தினர்          திரு.  அண்ணாதுரை
அவர்கள்

 🎤🎤🎤ஸ்பீக்கர்  🎤🎤🎤               

திருமதி. *ஜெ. நிர்மலா* அவர்கள்

          🎊🎊🎊🎊🎊🎊
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை  அழைக்கவும்.
இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்வை வளமானதாக்கிக் கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
     🎊🎊🎊🎊🎊🎊
 
           🌹 🌹🌹🌹🌹🌹ஒருங்கிணைப்பாளர்கள்:
 👉 திருமதி. K. உமாகோபி -      9629434932
👉 திரு. N.சண்முகமூர்த்தி -    9944132200
👉 திருமதி. A.நஸ்ரின் - 9659557657
👉 திருமதி. V.கவிதா- 8015273833
👉 திருமதி. R.உத்ரா - 9698151364
👉 திருமதி. கீதா - 81449  35961
 👉 திரு.  V. கண்ணகி  - 7639969116
            🙏🙏🙏🙏🙏🙏



இந்நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த  மக்கள் மறுமலர்ச்சி கழகம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் என்பவர் டிஜிபிக்கு இணையதளம் வாயிலாக மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் நானும் தஞ்சாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரையும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம் யாதவ் ( எல்பின் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர் குற்றப் பொருளாதாரப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்) என்பவரும் ஜாதியின் அடிப்படையில் செயல்படுவதாக ஜாதி வெறியை தூண்டும் வகையில் மனு அனுப்பியுள்ளார்.


பொதுநலன் கருதி போராடுபவர்கள் மீது ஜாதி சாயம் பூசுவது ஏன். 18 மாதங்களுக்கு முன்பு வருமான வரி ரெய்டு முடிந்த பின்பு எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு விட்டது. இது அந்தக் வழக்கறிஞர் பொன். முருகேசன் அவர்களுக்கு தெரியாதா. எல்பின் நிறுவனத்திற்கு  ஒருதலைபட்சமாக பேசுவதும் பொதுமக்கள் பாதிப்படைவது  கருதாமல் பொன். முருகேசன் அவர்கள் ஒருதலைபட்சமாக பேசுவது போல் உள்ளது. நான் தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார்கள். தற்போது கூட  சிவகங்கை எஸ்பி அலுவலகம் முன்பு அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வந்து தான் பேசுகிறேன்.
பொது மக்களுக்காக போராடும் என்னுடைய செய்தியை ஏன் பத்திரிக்கை நண்பர்கள் பொதுமக்கள் நலனுக்காக எல்பின் நிறுவனம் பற்றிய உண்மையை ஏன் எழுதக் கூடாது ? எல்பின் ராஜா (எ) அழகிரிசாமியும், SRK ரமேஷ் குமார்(எ) ரமேஷும் எந்தப் பத்திரிகையிலும் நமது செய்தி வராது அனைத்துப் பத்திரிகைகளும் நாம் விளம்பரம் தருகிறோம் என தெனாவட்டாக பேசி வருவதாக சில நண்பர்கள் கூறுகிறார்கள். காசுக்காக அனைவரும் விலை போகமாட்டார்கள் நீதி என்றும் வெல்லும். நான் அளித்த மனுவின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றால் எந்த முகாந்திரமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரமேஷ் குமார் அவர்களின் பத்திரிகையில் காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் எழுதி வருகிறார்கள்.

தற்போது வழக்கறிஞர் பொன்.முருகேசன் என்பவர் என்னை பார்த்ததே இல்லை திருவேங்கடம் யாதவ் என்பவரையும் பார்த்ததில்லையாம். இந்நிலையில் எங்களின் மீது அவர் டிஜிபிக்கு புகார் அளித்தது ஏன் ?

 
இந் நிறுவனத்தில் பொன். முருகேசன் அவர்கள் என்னவாக உள்ளார் என தெரியவில்லை.

மேலும்  ELFIN  நிறுவனம் முறைப்படி அனுமதி இல்லாமல் நடத்தும் கூட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் .ஜெய்ஹிந்த்

0 comments: