Tuesday, February 11, 2020

On Tuesday, February 11, 2020 by Tamilnewstv in ,    
மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்வதற்க்கும் கல்விக் கண்காட்சி.

கண்காட்சியில் அனைத்து பாடங்களிலிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்திய  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை ஊராட்சியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. 110 மாணவ,மாணவிகள், 7 ஆசிரியர்களுடன் இயங்கும் இப்பள்ளியின் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,அறிவியல் தொழில்நுட்பத்தை கற்றறியவும்,எளிமையில் புரிந்து கொள்வதற்காகவும் கல்விக் கண்காட்சி இப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

லால்குடி வட்டார கல்வி அலுவலர் மார்டீன் கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் அனைத்து பாடப்பிரிவுகளிலிருந்தும் காட்சிகள் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தது.

இதில் தேசப்பற்று ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அகல் விளக்குகளால் அமைத்த  இந்திய வரைபடம்,சமூகம் அன்றும், இன்றும் நாம் பயன்படுத்திய பொருட்கள், கண்டங் களை கண்டறிவது என ஏழு கண்டங்களில்  என்னென்ன தாவரங்கள், விலங்குகள் உள்ளது என மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட் சியில் வைக்கப்பட்டது. இந்திய தலைவர்களின் புகைப்படம்,கற்கால கருவிகள்,கணித பூங்கா,கணித வடிவ கார்பெட், இந்திய,வெளிநாட்டு நாணயங்கள்,பணத்தாள்கள்,நீர்மேலாண்மை,மூலிகை தாவரங்கள், ஐவகை நிலங்கள், எளிய முறையில் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ள சாட்டுகள் உள்ளிட்டவைகள்  கல்வி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் கல்விக் கண்காட்சியில் பங்குபெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை ஸ்ரீரங்கம் அரிமா சங்கத்தினர் வழங்கினர். கண்காட்சியை மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

பேட்டி : திருமாளவளவன் ( தலைமையாசிரியர் )

0 comments: