Thursday, August 14, 2014
திருப்பூர்,ஆக.14-
திருப்பூரில் நடந்த விழாவில் 100 நெசவாளர்களுக்கு ரூ. 8.35 லட்சம் மதிப்பில் விலையில்லா தறி உபகரணங்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.
திருப்பூர், பிச்சம்பாளையம் புதூர் ஸ்ரீ நகரில் தந்தை பெரியார் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் நெசவாளர்களுக்கு விலையில்லா தறி மற்றும் உபகரணங்களை வழங்கும் விழா சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் சி.சென்னியப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசியதாவது:
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி சங்கங்கள் சிறப்பாக செயல்பட செய்துள்ளார். தமிழ்நாட்டில் நெசவாளர்களுக்காக 500 க்கும் அதிகமான பசுமை வீடுகள் கட்டப்படுவது திருப்பூர் மாவட்டம்தான் முதலிடம் வகிக்கிறது.
நெசவாளர் சங்கங்கள் ஒன்று கூடி வடக்கு தொகுதியில் உள்ள வள்ளிபுரத்தில் பசுமை நகர் என்ற பெயரில் மிகப்பெரிய நகரம் உருவாக்கி வருகிறது. பசுமை வீடுகள் கட்ட 15 ஆயிரம் மூட்டை சிமெண்டு அரசு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்காக முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ள திட்டங்கள் எண்ணிலடங்காதவை. நெசவாளர்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.3200 மின் ராட்டைகள் திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. அதில் 250 ராட்டைகளை இன்று வழங்கப்படுகிறது. நெசவாளர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் கடந்த 2012 -2013 ஆம் ஆண்டு ரூ.362.84 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.516.08 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.408.36 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.636. 81 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்த லாபம் ரூ.78.72 லட்சம் ஆகும். உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு ரூ.10.30 லட்சம் போனஸாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி நெசவாளர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி செய்து வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நெசவாளர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தருவதற்கு அறிவிப்பு செய்து நெசவாளர்கள் கட்டும் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீட்டிற்கு ரூ.2.60 லட்சம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரே இடத்தில் 374 வீடுகள் கட்ட கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்து இங்கு நடைபெற்று வரும் பணியை மற்ற மாவட்டத்தில் உள்ளவர்களும் வந்து பார்வையிட்டு செல்லும் வகையில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திருப்பூர் திகழ்கிறது. இந்தியா வில் உள்ள எந்த மாநிலத்திலும் எந்த முதல்வர்களும் தராத நல்ல பல திட்டங்களை ஜெயலலிதா தந்து கொண்டிருக்கிறார்.
நெசவாளர்களின் துயரங்களை போக்கியவர். நெசவாளர்களுக்கு மானியத்துடன் ரூ.25,000 கடனும், இச்சங்கத்தின் மூலம் 220 உறுப்பினர்களுக்கு ஜகார்ட் பெட்டிகள், தார் சுற்றும் மின் மோட்டார் ராட்டை ஆகிய உபகரணங்கள் ரூ19.83 லட்சம் மதிப்பில் மானியமாக அனுமதிக்கப்பட்டு முதல் கட்டமாக 100 பயனாளிகளுக்கு ரூ. 8.35 லட்சம் மதிப்பிலான தறி உபகரணங்கள் இந்த விழாவில் வழங்கப்படுகிறது.
இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடந்த 2012 -2013 ஆம் ஆண்டு ரூ.362.84 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.516.08 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.408.36 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.636. 81 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்த லாபம் ரூ.78.72 லட்சம் ஆகும். உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு ரூ.10.30 லட்சம் போனஸாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:-
இந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் வெங்கடாசலம் புதிய புதிய ரகங்களை தேடி கண்டு பிடித்து தயார் செய்ததின் பயனாக சங்கத்திற்கு நிகர லாபம் ரூ.20 லட்சம் கிடைத்துள்ளது இதுபோன்ற ஆர்வம் மற்ற கூட்டுறவு சங்க தலைவர்களுக்கும் வரவேண்டும்.நேசவலர்களுக்கு கட்டபப்டும் பசுமை வீட்டினை இதுவரை மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 8 க்கும் மேற்ப்பட்ட நகரங்களில் இருந்து அதிகாரிகள் கூட்டுறவு சங்க அங்கத்தினர்கள் பார்த்து சென்றுள்ளனர்.திருப்பூரில் கட்டப்படும் பசுமை வீடு மற்ற மாவட்டத்திற்கு வழிகாட்டியாக அமையும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட திருப்பூர் மேயர் அ விசாலாட்சி முன்னிலை உரையில் பேசும்போது,
இந்தியா தான் உலகிலேயே நெசவு தொழிலில் தலை சிறந்து விளங்கிய நாடு. தமிழக நெசவாளர்களின் துணிகள் மிகவும் தரமாணவை; உயர்ந்த தரம் உடையவை. ஆங்கிலேயர்கள் பருத்தியை எடுத்து சென்று இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்து நம்மை வீழ்த்தினார்கள். ஆங்கிலேயரை வீழ்த்த சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் கையில் எடுத்து போராடியது உப்பையும் ராட்டையையும்; இன்று முதல்வர் ஜெயலலிதா மலிவு விலையில் உப்பை தருகிறார். அதேபோல் நெசவாளர்கள் சிரமப்படாமல் இருக்க விலையில்லா மின் ராட்டை வழங்கி இருக்கிறார். இந்தியாவில் வாழும் மகாத்மாவாக அவர் திகழ்கிறார் என்றார்.
விழாவில் 100 பயனாளிகளுக்கு தறி உபகரணங்களை வழங்கியும் வீட்டு மனை பட்டா ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார், மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட புடவைகளையும் அறிமுகப்படுத்தினார் மற்றும் புதிய ஆடை வடிவமைப்பு புத்தகத்தை மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் டி.வெங்கசலத்திடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எம்.சண்முகம் மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் கே.வி.மனோகரன், திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க சம்மேளன தலைவர் ஜெ.ஜெ.பி.ஜெகநாதன் ஆகியோர் பேசினார். மேலும் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், வி.ராதாகிருஷ்ணன் ஜெ.ஆர்.ஜான் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் வளர்மதி கருணாகரன்,வி.எம்.கோகு ல், கே.சுந்தரமூர்த்தி, சென்னியப்பன் மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சபரீஷ்ஷ்ரன், விஜயகுமார், கே.என்.விஜயகுமார் மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் டி.பார்த்திபன், கேபிள் பாலு, ராஜ்குமார், பி.பார்த்திபன், அன்பரசன், மா வட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர்கள் சாய்பாபா, பாலாஜி ஆகியோர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் தந்தை பெரியார் நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் ஆ.சண்முகம் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
0 comments:
Post a Comment