Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
வெள்ளாளர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: நடிகர் ராஜன்
தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்க 23–வது ஆண்டு விழா மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் செல்வராஜ் பிள்ளை தலைமை தாங்கினார். ராஜா என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் கண.நாகராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய வெள்ளாளர், பிள்ளைமார், செங்குந்தர், முதலியார் கூட்டமைப்பு தலைவரும், நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான கே.ராஜன் கலந்து கொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:–
நம் நாட்டை வெள்ளையர்களிடம் இருந்து மீட்க போராடியவர்களில் முக்கிய இடம் பிடித்தவர் வ.உ.சி.பிள்ளை. சுதந்திர தியாகி மட்டுமல்ல அவர். ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை விரட்டியடிப்பது, கைது செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்கின்றனர்.
இது குறித்து தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் அவரது குரலுக்கு மத்திய அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இலங்கையில் சுமார் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கவும், தமிழக மீனவர்களை அத்து மீறி கைது செய்யவும் காரணமான ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமுதாயம் தற்போது பிள்ளைமார், முதலியார், சோழியபிள்ளைமார், துளுவ வெள்ளாளர் என பல பிரிவுகளாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெள்ளாளர் என ஒரே பெயருக்கு கீழ் இணைய வேண்டும். வெள்ளாளர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்தியமாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவோம். அரசியல் நடத்திடவும், ஆட்சியை பிடிக்கவும் வ.உ.சி.யை முன்னிறுத்தி அனைவரும் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஏழைப்பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்க செயலாளர் வையாபுரி வரவேற்றார். முத்தையா பிள்ளை உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.