Friday, October 31, 2014

On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying NEWS 3-1.JPGDisplaying NEWS3-4.JPGDisplaying NEWS3-6.JPGநீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் மழை காரணமாக வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருவது வைகை அணையாகும். கடந்த 2 வருடங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணை வறண்டு காணப்பட்டது. குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. பெரியாறு அணையில் இருந்து ஓரளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குடிநீர் பிரச்சினை சமாளிக்க முடிந்தது.இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை முடிந்து தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.இதை தொடர்ந்து அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே வைகையாற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏற்கனவே வைகை அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே பெய்யும் மழை நீரும் வைகையாற்றுக்குள் வருகிறது.இதனால் வைகையாற்றில் சுமார் 4 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதுரை நகர் பகுதியில் வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

0 comments: