Thursday, October 30, 2014

On Thursday, October 30, 2014 by Unknown in ,    
கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா கோவையில் நடந்தது. கரூர் வைஸ்யா வங்கி, கே.வி.பி., மல்டி கரன்சி டிராவல் கார்டு என்ற பிரிபெய்டு ரீ லோடபிள் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இக்கார்டு மூலம், யு.எஸ். டாலர், ஈரோ மற்றும் எஸ்.ஜி.டி., ஆகிய மூன்று கரன்சிகளை கையாளலாம். வெளி நாட்டு பயணங்களின் போது, எளிதாக கொண்டு செல்லவும், பாதுகாப்பானதாகவும் இருக்க கூடியது. கே.வி.பி., நெட்பேங்கிங் மூலம், இந்த கார்டுதாரர்கள், அதன் இருப்பை தெரிந்து கொள்ளலாம். கார்டு பெறப்பட்ட நாள் முதல், 5 ஆண்டுகளுக்கு, கார்டை பயன்படுத்த முடியும். கரூர் வைஸ்யா வங்கியின் தேர்தெடுக்கப்பட்ட கிளை வாடிக்கையாளர்களுக்கு கார்டு கிடைக்க உள்ளது.
கார்டின் அறிமுக விழா, கோவையில் நடந்தது. கே.வி.பி., மல்டிகரன்சி டிராவல் கார்டை, கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குனர் வெங்கடராமன் அறிமுகப்படுத்தினார். முதல் கார்டை கரூர் வைஸ்யா வங்கியின் முன்னாள் தலைவர் ஜனார்த்தனன், அளிக்க, கோவை கங்கா மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கனகவள்ளி சண்முகநாதன், பெற்றுக்கொண்டார்.

0 comments: