Wednesday, April 22, 2015

On Wednesday, April 22, 2015 by Unknown in ,    
திருப்பூர் வருமானவரி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வரி செலுத்தும் சிறப்பு சேவை மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சிறப்பு வரி செலுத்தும் மைய திறப்பு விழாவிற்கு முதன்மை ஆணையர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை ஆணையர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். வருமான வரித் துறை முதன்மை ஆணையர் கே.கே.மிஸ்ரா சேவை மையத்தை திறந்து வைத்து பேசியது:
வரி செலுத்துவோரின் நலனுக்காக திருப்பூரில் சிறப்பு சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.633.94 கோடி மொத்த வரித்தொகை வசூல் செய்யப்பட்டது. 2014-15ம் ஆண்டில் வரி வசூல் ரூ.782.74 கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கும் "ரீபண்ட்' தொகை, கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.69.55 கோடியாக இருந்தது. 2014-2015ம் ஆண்டில் ரூ.91 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15ம் ஆண்டின் நிகர வரி வசூல் ரூ.564.39 கோடியில் இருந்து ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 22.4 சதவீத வளர்ச்சியாகும். மொத்த வரி வசூல் இலக்கு ரூ.676.63 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயித்த இலக்கைவிட ரூ.14.21 கோடி அதிகமாக வசூலாகி ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது. கோவையைவிட திருப்பூர் பகுதியில் வரி செலுத்தும் பணிகள் நிறைவாக நடந்துள்ளன என்றார்.

0 comments: