Wednesday, April 22, 2015

On Wednesday, April 22, 2015 by Unknown in ,    
திருப்பூரில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, இறந்தவரின் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). கூலித் தொழிலாளியான இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நீண்டநேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர்.
இந் நிலையில், திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு இளைஞர் தலையில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அவர் கூலித்தொழிலாளி மாரிமுத்து எனத் தெரியவந்தது. அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோவைக்கு செல்லும் வழியிலேயே மாரிமுத்து இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், மாரிமுத்து தனது வீட்டின் அருகில் வசிக்கும் கண்ணனுடன் (41)ஞாயிற்றுக்கிழமை மது அருந்தினாராம். அப்போது இருவருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மாரிமுத்துவை கண்ணன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, திருப்பூர் தெற்கு போலீஸார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, கண்ணனை கைது செய்தனர்.

0 comments: