Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குனியமுத்தூர் குடியிருப்பு நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாகரத்தினம், இளங்கோ, கிருஷ்ணன், ரஹமத்துல்லா, பொருளாளர் ரகுமான், கவுரவ ஆலோசகர் மயில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சையது ஈசாக் வரவேற்புற்றார். ஆலோசனை கூட்டத்தில் குறிஞ்சி நகர், வசந்தம் நகர், லவ்லி கார்டன், பாரதி நகர், அம்மன் கோவில் பிரதான சாலை, பிருந்தாவன் சர்க்கிள் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த அனைத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் குனியமுத்தூர் பகுதியிலுள்ள 87–வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சாலை வசதிகள், சாக்கடை கால்வாய் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.
எனவே வருகிற கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே அனைவரும் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் நடராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...

0 comments:
Post a Comment