Wednesday, July 16, 2014

On Wednesday, July 16, 2014 by Anonymous in    
சென்னை ராயபுரம் ரயில் நிலையம் மூன்றாவது ரயில் முனையமாக மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அவர் பேசியது:
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1,233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வேயில் எந்த பிரிவும் தனியார் மயமாக்கப்படவில்லை.
சென்னை ராயபுரத்தை ரயில் முனையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டண உயர்வுக்குப் பிறகும் பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பகாரியாச்சில் இருந்து புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்படும். கோம்திநகர் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு இணையாக தரம் உயத்தப்படும் என்றார் கெளடா.

0 comments: