Wednesday, August 27, 2014
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு இரண்டு மணி
நேரம் வாதிடுவதற்கு அனுமதி அளித்தும் ஆஜராகாததால் கோபம் அடைந்த நீதிபதி,
வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் நேற்று தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.
இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மொத்தம் 42 நாட்கள் இறுதி வாதம் நடைபெற்று உள்ளது. இதில் ஜெயலலிதா சார்பில் 25 நாட்களும், சசிகலா சார்பில் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது சார்பில் 8 நாட்களும் இறுதி வாதம் நடந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட தனக்கு கூடுதலாக 2 மணி நேரம் வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார், நீதிபதியிடம் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று வாதிடுமாறு அவருக்கு அனுமதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தனக்கு மேலும் 2 நாட்கள் ஒதுக்குமாறு கேட்டார். இதையடுத்து, அடுத்த மாதம் 1, 2ஆம் தேதிகளில் அவர் வாதிட நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு
வழக்கறிஞர் குமார், நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடாமல் கர்நாடகா உயர்
நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அங்கு, சொத்துக்குவிப்பு வழக்கில்
இருந்து விடுவிக்க கோரி தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வழக்கிலும்,
சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் கூட்டுச்சதி மற்றும்
கூட்டுச்சதிக்கு தூண்டுதல் என்ற வார்த்தையை நீக்கக் கோரி ஜெயலலிதா
தொடர்ந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனால்,
வழக்கறிஞர் குமார் அங்கு சென்று விட்டார்.
இதனால், கோபம் அடைந்த நீதிபதி, மாலை 5 மணி வரை நீதிமன்றத்தில் இருப்பேன். அதற்குள் குற்றம்சாட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும். இல்லையென்றால் வழக்கில் இறுதிவாதம் முடிவடைந்து விட்டதாக கூறிவிட்டு தீர்ப்பு தேதியையும் அறிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
நீதிபதி நீதிமன்றத்திலேயே காத்திருப்பதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் நேற்று தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.
இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மொத்தம் 42 நாட்கள் இறுதி வாதம் நடைபெற்று உள்ளது. இதில் ஜெயலலிதா சார்பில் 25 நாட்களும், சசிகலா சார்பில் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது சார்பில் 8 நாட்களும் இறுதி வாதம் நடந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட தனக்கு கூடுதலாக 2 மணி நேரம் வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார், நீதிபதியிடம் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று வாதிடுமாறு அவருக்கு அனுமதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தனக்கு மேலும் 2 நாட்கள் ஒதுக்குமாறு கேட்டார். இதையடுத்து, அடுத்த மாதம் 1, 2ஆம் தேதிகளில் அவர் வாதிட நீதிபதி அனுமதி அளித்தார்.
இதனால், கோபம் அடைந்த நீதிபதி, மாலை 5 மணி வரை நீதிமன்றத்தில் இருப்பேன். அதற்குள் குற்றம்சாட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும். இல்லையென்றால் வழக்கில் இறுதிவாதம் முடிவடைந்து விட்டதாக கூறிவிட்டு தீர்ப்பு தேதியையும் அறிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
நீதிபதி நீதிமன்றத்திலேயே காத்திருப்பதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
0 comments:
Post a Comment