Wednesday, August 27, 2014
வாடிப்பட்டி பெரியாறு பிரதான கால்வாய் (பி.டி.4) பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கட்டக்குளம் ராமசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
முல்லைபெரியாறு பாசன விவசாயிகள் பருவமழைகள் பொய்த்துபோனதால் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியாறு அணையில் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்ததால் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பெரியாறு அணையில் தண்ணீர் 2 ஆயிரம் மில்லியன் கன அடி வந்தவுடன் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும், 4ஆயிரம் அடி வந்தவுடன் பேரனை முதல் கள்ளந்திரி வரை உள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கும், 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒருபோக சாகுபடி நிலங்களுக்கும், 7 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் விரிவாக்க பகுதி நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பெரியாறுபாசன நீர் பங்கீட்டின் விதிமுறைகளாகவும் அதனை நடைமுறை படுத்தவும் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த விதிமுறைப்படி தற்போது கம்பம் பகுதிக்கு அடுத்து பேரனை முதல் கள்ளந்திரி வரை இருபோக சாகுபடி ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரை உடனே திறந்து விடவேண்டும். காரணம் கண்மாய் வசதியற்ற இப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் விவசாயத்தை செய்திட முடியும். 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒரு போக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறந்தால் கண்மாய் வசதி கொண்ட அப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். ஆனால் தற்போது 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தபின்பும் இதுவரை திறக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் வேதனையை அதிக படுத்தி வருகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்டிய தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நீர்பங்கீட்டிற்கு நீதிகிடைத்திட வைகை அணையிலிருந்து பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்திட உத்தரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment