Friday, August 15, 2014
திருப்பூரில் நடைபெற்ற 68-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கொடி ஏற்றி வைத்து ரூ.2.55 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.சரியாக 9.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தேசிய கொடியியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகிகளை கௌரவித்தார்.சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை கலெக்டர், மாநகர காவல்துறை ஆணையாளர் ஆகியோர் பறக்க விட்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகர காவல் துறை யை சேர்ந்த 51 பேர் உள்ளிட்ட 92 காவலர்களுக்கு பதக்கங்களும், சிறப்பாக பணியாற்றிய 70 அரசு அலுவலர்களுக்கு நற்சன்றிதல்களும் வழங்கப்பட்டன.பின்னர் வீட்டு மனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை மற்றும் பசுமை வீடு, இந்திர நினைவு குடியிருப்புகள் உள்ளிட்ட வைகளுக்கு ரூ.2 கோடியே,54 லட்சத்து,58 ஆயிரத்து,833 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 406 நபர்களுக்கு வழங்கினார்.
விழாவில் மாநகர காவல் ஆணையாளர் என்.எஸ்.சேஷாய், மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங், மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் பாரி, திட்ட அலுவலர் திரவியம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஆர்.டி.ஓ.பழனிகுமார், தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட கலெக்டர் கௌரவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...








0 comments:
Post a Comment