Saturday, August 09, 2014
ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான
(7.8.14) இன்று ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள்
ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் ரூ.250/- க்கு மேல்
புத்தகங்களை வாங்கிச் சென்று பேரவையின் சார்பில் வழங்கப்படும் ‘நூல் ஆர்வலர்’
சான்றிதழைப் பெற்றுச் சென்றனர்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை
மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பணியும்
பாதையும்’ அரங்கினை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்தது மட்டுமின்றி வெகுவாகப் பாராட்டினர்.
'உலகத்தமிழர்களெல்லாம் ஓரிடத்தில்' என்பதற்குச் சாலப்பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ள தமிழவேள்
கோ. சாரங்கபாணி நினைவு உலகத்தமிழர் படைப்பரங்கத்தை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகைப் புரிந்திருந்த தமிழறிஞர்களும், புத்தக ஆர்வலர்களும் வியந்து வியந்து கண்டுகளித்தனர்.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு எஸ்.சிவானந்தன் அவர்கள் தலைமை வகித்தார்.
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு ஆர். மோகன்ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர்
த. ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை ஆற்றினார்.
விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'கசடறக் கற்க' என்றும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்புரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை ம...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...