Wednesday, September 03, 2014
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், சுமார் 50 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய டீசர் பத்திரிக்கையாளர்களுக்கு என்று பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. அதில், உடல் முழுவதும் ரோமங்களுடன், பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் ஓநாய் போன்ற உருவத்தில் தோன்றுகிறார் விக்ரம்.
தவறான பாதையில் செல்லும் விளையாட்டு வீரனை குறித்து அறிவியல் பரிசோதனை செய்யும் கதைக்களம் தான் ‘ஐ’ எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் உடற்கட்டு கொண்டவராக காட்சி தருகிறார் என தகவல்கள் வெளியாயின.
இப்படத்திற்காக விக்ரம் மணிக்கணக்கில் உடற்பயிற்சிக் கூடத்தில் கிடந்து உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் விழாக்களில் அவ்வப்போது தலைகாட்டினார். ஆனால், விக்ரமின் அந்த தோற்றத்தில் உள்ள காட்சிகள் இல்லாமல் அவர் ஒழுங்கற்ற வகையில், அடையாளம் காண முடியாத முகம் மற்றும் விலங்குகளை போன்ற கால்களுடனும் காட்சி தரும் காட்சிகள் டீசரில் வெளியிடப்பட்டது.
இந்த டீசருக்காக டம்மியான இசை பின்னணியில் ஒலிக்க செய்யப்பட்டது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இப்படத்தில் ஹாலிவுட்டில் ஹிட் ஆன ஹல்க் படத்தின் சாயல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என கருத்து பரிமாறிக் கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
மே-1ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு விஷேச தினமாக தமிழகத்தின் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...

0 comments:
Post a Comment