Wednesday, September 03, 2014
இந்தியாவில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவை இன்று தலைநகர் டோக்கியோவில் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்தியாவில் நவீன நகரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் டாலரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ 2.01,480 கோடி முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முதலீடு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்ததாக இருக்கும்.
இந்தியாவில் அதிவேக ஷின்கான்சென் ரயில் முறையை அறிமுகம் செய்ய நிதி, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு ஆதரவு அளிக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் இந்தியாவில் படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை இருநாடுகளும், கணிசமாக உயர்த்த உள்ளது. இந்தியாவில் ஜப்பான் மொழி கல்வி மேம்படுத்தப்படும். உலக அளவில் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க இந்திய-ஜப்பான் உறுதி ஏற்றுள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
மே-1ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு விஷேச தினமாக தமிழகத்தின் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...

0 comments:
Post a Comment