Tuesday, September 02, 2014
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விதவை சான்று வழங்க பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...

0 comments:
Post a Comment