Saturday, September 06, 2014
திருப்பூர் வருவாய் கோட்டாசியராக பணியாற்றி வந்த பழனிகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படத்தை தொடர்ந்து திருப்பூர் சப்-கலெ க்டராக ஐ.ஏ.எஸ்.அதிகாரியான செந்தில்ரா ஜ் பொறுப்பேற்றுள்ளார். புதுக்கோட் டை மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற, ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்ததும், முதன்முதலாக திருப்பூருக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் வந்த அவர், கலெக்டர் ஜி.கோவிந்தராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் , சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய சப்-கலெக்டர் செந்தில்ராஜை திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் கோட்டத்தில் பரம்ஜித் சிங் சித்து (1991 செப்., 30 - 1992 அக்., 5 வரை), ஹித்தேஸ் குமார் மக்வானா (1997 செப்., 1 - 1999 பிப்.,15 வரை), பங்கஜ் குமார் பன்சால் (1999 ஆக., 8 - 2000வது ஆண்டு அக்., 24 வரை) ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக இதுவரை பணியாற்றியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரிந்த பிறகு, மாவட்ட அளவில் முதல் சப்-கலெக்டராகவும், திருப்பூர் கோட்டத்தின் நான்காவது சப்-கலெக்டராக செந்தில்ராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment