Saturday, September 13, 2014
காங்கயம், செப்.13–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொங்கலூரை அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 50). இவர் கடந்த 10–ந் தேதி குளிப்பதற்கு பி.ஏ.பி. வாய்க்காலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் அருள்தாசை தேடினர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவினாசிபாளையம் போலீசில் அருள்தாஸ் மாயமாகிவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருள்தாசை தேடி வந்தனர். இந்த நிலையில் காங்கயத்தை அடுத்த அலகுமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது மாயமான அருள்தாஸ் என்பது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...

0 comments:
Post a Comment