Wednesday, September 03, 2014
திருப்பூர், : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும், துறை தலைவராகவும் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் துணை முதல்வராகவும், வணிகவியல் துறை தலைவராகவும் இருப்பவர் கல்லூரியின் உடை மாற்றும் அறையில் எடுத்த மாணவிகள் சிலரின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக, நேற்று முன்தினம் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கல்லூரி முன்பு அமர்ந்து மூன்று மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து கல்லூரிக்கு வந்த காங்கயம் டி.எஸ்.பி., சுருளிராஜா, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம், எஸ்.ஐ., வருணியா மற்றும் கல்லூரி முதல்வர் சுப்ரமணியம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட வணிகவியல் துறை தலைவரை மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர்கள் தர்ணா போராட்டத்தை கைவி ட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர், கல்லூரி முதல்வர் சுப்ரமணி இதுகுறித்து கூறுகையில், வணிகவியல் துறை தலைவர் மீது கூறப்பட்டுள்ள இந்த புகார் உண்மையல்ல, அவர் மிகவும் கண்டிப்பாக நடத்து கொள் வதால் சிலர், அவர் மீது தவறான புகாரை தெரிவித்துள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment