Saturday, October 04, 2014
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment