Friday, October 03, 2014
திருப்பூர், அக்.3-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு தெரிவித்து, அக்.4 சனிக்கிழமை திருப்பூரில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய சங்கங்களின் சார்பாக ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சூழ்நிலையில், கடந்த நான்கைந்து நாட்களாக ஆளும்கட்சியினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர் அமைதியான முறையில் உண்ணாவிரதம், கறுப்புச் சட்டை அணிதல் போன்று செயல்படுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால், நீதிமன்றம் சட்டரீதியாக தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை ஆட்சேபிப்பதாக இருந்தால், சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனநாயகரீதியாக கருத்து சொல்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த விசயத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் திருப்பூர் போன்ற பல லட்சம் தொழிலாளர் உழைக்கும் நகரில், இதுபோன்ற காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தம் செய்வது,தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பை ஏற்படுத்தும், பொது மக்களுக்கு மேலும் பலவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.
ஆகையால், பொது மக்கள் நலன் கருதி இந்த உற்பத்த நிறுத்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...

0 comments:
Post a Comment