Sunday, October 12, 2014
இந்தியாவில் பல்வேறு தொழில்களில் அன்னிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி பட்டதாரிகள், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கான தேவை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை அழகர்கோவில் அருகிலுள்ள லதா மாதவன் பாலிடெக்னிக்கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்குமுதல்வர் தவமணி தலைமையில் நடைபெற்றது. மாணவர் வள மேம்பாட்டு பயிற்றுநரும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான சூரியகுமார் மாணவர்கள் சுய திறன் வளர்ச்சி குறித்து பேசுகையில், ஜப்பானும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு நம் நாட்டில் முதலீடு செய்கின்றன. இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள், உதிரிப் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மூலப்பொருளை முடிவுற்ற பொருளாக மாற்றும் தொழிற்சாலைகள் என இரண்டாம் நிலைத் தொழில்களைச் செய்யும் தொழிற்சாலைகளை இந்தியா முழுவதும் தொடங்க இந் நாடுகள் தயாராகி வருகின்றன.
இத் தொழிற்சாலைகளுக்கு ஸ்கில்டு லேபர் என்று சொல்லப்படக் கூடிய தொழில் திறன் பெற்றவர்கள் அதிகம் தேவைப்படுவர். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் இந்த தொழில்திறன் பெற்றவர்களாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் இவர்களையே அதிகம் விரும்பும். ஆனாலும், இம் மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த நடைமுறை அறிவையும், தொழில் அறிவையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாலிடெக்னிக் முடித்த ஸ்கில்டு லேபர் தேவை இப்போது இருப்பதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவில் சிவில் துறையின் தலைவர் மற்றும் துணை முதல்வர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ம...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது; இது குறித்த ஆலோசனை கூட்டம் மாநக...
0 comments:
Post a Comment