Tuesday, November 25, 2014
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஓய்வு இடைநிலை சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் எம்.திருமலைசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஈங்கூர் சேதுபதி முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில கரூர் மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தியாகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, நாகை மாவட்ட தலைவர் வரதராஜ், தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மேற்கொண்ட 3444 பேரில் இன்று வரை ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993 ஐ அமுல்படுத்தப்பட்டவர்கள் போக மீதியுள்ளவர்களுக்கு ஒரே ஆணையாகக் கல்வி செயலகம் வெளியிட வேண்டும். இன்று வரை 3444 பேரைத் தவிர்த்து புதிதாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற மற்றும் இன்னும் தீர்ப்பு பெறாத அனைவருக்கும் ஓர் பொது ஆணை வெளியிட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993க்கான அரசாணைகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கும் பள்ளி கல்வித்துறையின் நிலைப்பாட்டால் தேவையற்ற குளறுபடிகள் உருவாகியுள்ளது. எனவே அனைவருக்கும் ஒரே ஆணையாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரத முடிவில் மாநில இணைச்செயலாளர் அப்பாத்துரை நன்றி கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment