Saturday, November 08, 2014
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு நடவு முன்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் அணை நிரம்பி வந்த காலங்களில் முப்போகம் கரூர் மாவட்டத்தில் சாகுபடியானது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்புவதும், கரூர் மாவட்டத்திற்கு ஆற்றில் தண்ணீர் வருவதும் எப்போதாவது நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர்உரிமையும் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு கைகொடுக்கவில்லை. இதனால் வேளாண் பணிகளை மேற்கொள்ளவில்லை. சோளம், அவுரி செடி போன்றவைகளை மட்டும் பயிரிடப்பட்டது.ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கடந்த மாதம் அமராவதி அணை நிரம்பியது. தற்போதும் நீர்மட்டம் 85அடிக்கு மேல் உள்ளது.
இதனால் கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபோக சாகுபடியாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதேபோன்று கரும்பு விவசாயிகளும் கரும்பு பயிர் நடவு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment