Monday, December 08, 2014
அ.தி.மு.க. தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக நடத்த மக்களின் முதல்வர் அம்மா உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் நமக்குள், போட்டி, பொறாமை வேண்டாம் ஒற்றுமையோடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் உயர்ந்த பதவியில் அமரவைத்து அழகு பார்ப்பவர் அம்மா. பதவிகள் முக்கியமல்ல... நிரந்தரமும் அல்ல... அ.தி.மு.க. தொண்டராக இருப்பதே பெருமையான மிகப்பெரிய பதவியாகும்.
மக்களின் முதல்வர் அம்மா மக்களுக்கு செய்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. முல்லை பெரியாரில் 142 அடி நீர்மட்டத்தை உயர்த்த பாடுபட்ட மக்களின் முதல்வர் அம்மாவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்திட வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.
எனவே அமைப்புத் தேர்தலை அமைதியாகவும், ஒழுங்காகவும் ஒற்றுமை யாகவும் நடத்திட வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment