Monday, December 29, 2014
அதிகரித்துவரும் ஓட்கா விலையைக் கட்டுப்படுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே சிக்கலாகிவரும் ரஷ்ய பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் புடின், ஓட்காவின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதானது, பாதுகாப்பற்ற கள்ளச்சாராயத்தைக் குடிக்கும் போக்கை ஊக்குவிக்கக்கூடும் என்று கவலை வெளியிட்டிருக்கிறார்.
ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச அளவில் வீழ்ச்சியடைந்துவரும் பெட்ரோல் எண்ணெய் விலைகள் இரண்டுமாக சேர்ந்து ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பை சமீப காலத்தில் பெருமளவு வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
அடுத்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் மந்தநிலையை அடையும் என்று அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார்.
ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவரும் புடின், ஓட்கா விலைக்கட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்களை அதற்குத் தொடர்புடைய அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சட்டவிரோத சாராய வியாபாரத்தை தடுப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ரஷ்ய ஆண்களில் சுமார் 25 சதவீதமானவர்கள் தமது 50 வயதை எட்டுவதற்குள் இறந்துவிடுவதாக ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகைய வயது குறைந்த மரணங்களுக்கான காரணிகளில் ஒன்றாக சாராயமும் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்திருந்தது.
கடந்த ஓராண்டில் மட்டும் அரை லிட்டர் வோட்காவுக்கு ரஷ்ய அரசு பரிந்துரை செய்யும் குறைந்தபட்ச விலையானது 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் அரை லிட்டர் ஓட்காவின் அரசு பரிந்துரை விலை 220 ரஷ்ய ரூபிள்கள் ($4.10).
ரஷ்யாவில் ஓட்காவின் விலை மட்டுமல்ல, வருடாந்த பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. தற்போது ரஷ்யாவின் பணவீக்கம் 9.4 % என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment