Saturday, December 27, 2014
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள் இருந்த வளாகத்தின் மீது நடத்தப்பட்டது.
அதில் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அதே பகுதியில் உஸ்பெக் தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வளாகத்தின் மீது நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே கைபர் மாகாணத்தின், பாராப் பிராந்தியத்தில், தமது படைகளும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் இந்த மாதம் பெஷாவரிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைத் திட்டமிட்டவர் என்று சந்தேகிக்கப்படுபவரும் துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
0 comments:
Post a Comment