Sunday, December 14, 2014
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதன் 12-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழா வருகின்ற 2015-ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகின்றன.
இதற்காக புத்தகக்கண்காட்சி வரவேற்புக் குழுவின் அமைப்புக்கூட்டம் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ட்ரிபிள் எக்ஸ். குப்புசாமி தலைமை தாங்கினார்.பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். புத்தகக்கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார்அகமது ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழுத்தலைவராக ஆர்.ஏ.ஜெயபால், செயலாளராக செ.முத்துக்கண்ணன், பொருளாளராக அ.நிசார்அகமது, மேலும், 29 பேர் துணைத்தலைவர்களாகவும், 32 பேர் உதவிச்செயலாளர்களாகவும்1 32 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள் எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத்அலி, பிரிண்டிங் குமாரசாமி, திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர்.ஏ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எம்.தங்கராஜ், யுனிவர்சல் கல்வி நிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...

0 comments:
Post a Comment