Wednesday, January 28, 2015
இந்நிலையில் தொட்டியபட்டியில் கோமதியின் பெரியப்பா பொன்னையாவின் பேரன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கோமதி தனது தந்தை சின்னச்சாமி, தாய் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோருடன் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த கமலக்கண்ணனுக்கும், கோமதிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் அவரது சகோதரர் பரமசுந்தரம் ஆகியோர் கோமதி, சின்னச்சாமி, ராமுத்தாய் உள்பட 5 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கொடூரமாக கொன்ற கமலக்கண்ணன், பரமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்த இவர்களின் தாயார் சுப்புலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்து உசிலம்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். நீதிபதி கிறிஸ்டின்பபிதா, கொலையாளிகள் 3 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கமலக்கண்ணன், பரமசுந்தர் ஆகியோர் மதுரை சிறையிலும், சுப்புலெட்சுமி திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து சின்னச்சாமியின் மகன் தங்கப்பாண்டி, மருமகன் முத்து (கொலை செய்யப்பட்ட பாக்கியலட்சுமியின் கணவர்) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரின் உடல்கள் மங்கல்ரேவு சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் திடீரென பிணங்களை எரிக்க விடாமல் முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறாகள். ஆனால் இதுவரை யாரும் ஆறுதல் கூட தெரிவிக்கவரவில்லை என்று ஆவேசத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment