Wednesday, January 07, 2015
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது .இதனை மறு ஆய்வு செய்திட கோரி தமிழக அரசின் சார்பிலும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவே இதற்கு அவசர சட்டம் இயற்றி தமிழக அரசு அனுமதி வழங்கிடவும் ,வன விலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கவும் ,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பி ராஜசேகரன் தலைமை வகித்தார் .மதுரை ,சிவகங்கை ,ராமநாதபுரம் ,திண்டுக்கல் ,தேனி,திருச்சி ,தஞ்சை ,சேலம் ,கோவை ,விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர் .ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் பி ராஜசேகரன் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டை நடத்திட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இந்த தடை நிரந்தரமானதும் அல்ல நிலையானதும் அல்ல என பேசினார் .பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆறுமுக நயினாரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர் .மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடமும் கோரிக்கையை வலியுறுத்தினர் .உடன் அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளர் ஜெயராமன் ,சமத்துவ மக்கள் கட்சி கரு .நாகராஜன் ,ஈஸ்வரன் .ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment