Saturday, February 14, 2015
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு சில நாடுகளில் ஆதரவும், சில நாடுகளில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்தியாவில் காதலர் தினத்துக்கு பல அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
காதலர் தினமான இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் தேவர் தேசிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா, நிர்வாகிகள் சரவணன், சித்தன், ரமேஷ் உள்பட 20–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் காதலர் தினத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் இந்து இளைஞர் பேரவை சார்பில் காதலர் தினத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் 25–க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முகமூடி அணிந்து காதலர் தினத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment