Friday, February 06, 2015
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment