Sunday, March 08, 2015
காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 40 ஆயிரம் பேர்
பங்கேற்பது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கங்களின் போராட்டக்
குழு முடிவு செய்துள்ளது.
போராட்டக் குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. போராட்டக் குழு மாநில அமைப்பாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்துப் பேசினார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மா.விஜயபாஸ்கர், பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.மகாலிங்கம், ஓவர்சியர்கள் சங்க மாநிலத் தலைவர் தே.ஆறுமுகப்பெருமாள், சாலை ஆய்வாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், கணினி உதவியாளர்கள், முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப நல நிதித் திட்டத்தை விரிவுபடுத்துதல், சாலை ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு முறையே பணிமேற்பார்வையாளர் உதவிப்பொறியாளர் பதவி உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்றும், இதில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 18 ஆம் தேதி வட்டார அளவில் ஆர்ப்பாட்டம், மார்ச் 19 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment