Friday, August 14, 2015
சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வறட்சியான பகுதியாக இருந்த சிவகாசி நகருக்கு குடிநீர்
ஆதாரமாக சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள வெம்பக்கோட்டையில் 30 ஆண்டுகளுக்கு
முன்னர் அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் 7 மீட்டர் உயரம் வரை தண்ணீரை தேக்கலாம்.
அதிகமாக தண்ணீர் வந்தால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு, இருக்கன்குடி அணைக்கு
செல்லும்.
அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அந்தத் தண்ணீர்
சுத்திகரிக்கப்பட்டு, குழாய் வழியாக சிவகாசி நகருக்கு குடிநீர் கொண்டு
வரப்படுகிறது.
இந்த அணைக்கு அரசு சிமெண்ட் ஆலை உள்ள ஆலங்குளம்,
சேத்தூர்-சிவகிரிப் பகுதியிலும், திருவேங்கடம் பகுதியிலும் மழைபெய்தாலும்
தண்ணீர் வரும்.
காலப் போக்கில் சிவகாசியில் மக்கள் தொகை அதிகமானதால்,
சிவகாசிக்கு மானூர் கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், வெம்பக்கோட்டை அணைப் பகுதியில்
வறட்சிகாலத்தில் நகராட்சி கிணறு அமைத்தும், உறைகிணறு அமைத்தும் தண்ணீர்
எடுத்து வருகிறது.
தற்போதும், தினசரி 10 முதல் 15 லட்சம் லிட்டர் வரை
தண்ணீர் எடுக்கப்படுகிறது. எனினும், இந்த அணை கட்டப்பட்ட நாள்முதல் இதுவரை
தூர்வாரப்படவில்லை. அவ்வப்போது மதகுமட்டும் சீரமைக்கப்படும்.
இந்த அணையை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, தண்ணீர் வரத்துப்பகுதியிலும்,
அணைப்பகுதியிலும் சீமைகருவேல் மரங்கள் வளர்ந்துள்ளது. மேலும் அணைப்
பகுதியில் சுமார் 2 மீட்டர் அழம் வரை வண்டல் மண் படிந்துள்ளது.
மழைபெய்து தண்ணீர் வந்தால், இரண்டு மீட்டர் வரை சகதியும் சேறுமாக காட்சியளிக்கிறது. இதனால் தண்ணீரை முழு கொள்ளளவு நிரப்ப இயலவில்லை.
மழைக் காலங்களில் அணை நிரம்பிவிட்டது என தண்ணீரை
திறந்துவிடுகிறார்கள். ஆனால், இரண்டு மீட்டர் ஆழம் வரை சகதியாக இருப்பதால்
தண்ணீர் விரைவில் காலியாகிவிடுகிறது.
அணைப் பகுதியிலும், நீர்வரத்துப் பகுதியிலும் உள்ள
முள்செடிகளை அகற்றி, மணல் மற்றும் களி மண்ணை அகற்றி தூர்வார வேண்டும் என
சிவகாசி நகர பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது குறித்து சிவகாசி நகர் மன்றத்தலைவர்
வெ.க.கதிரவனிடம் கேட்டபோது, பொதுப்பணித் துறையினரிடம் அணையை
தூர்வாரவேண்டும். அணையின் முன்பு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என நகராட்சி
சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment