Friday, August 28, 2015
விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாரமன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில், விளைநிலங்கள், தோட்டங்கள், பயிரிடப்படாத நிலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை வேரோடு அகற்றுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செடிகளை அகற்றும் போது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு கைகளில் துணிகள் அல்லது கையுறைகள் அணிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். விளைநிலங்களில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த குளோபிரிட் 5 மில்லி அளவில் விதையில் போட்டு நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும். இதே மருந்தை வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லி முதல் 125 மில்லி வரையில் தெளிக்க வேண்டும். அதேபோல், வயல் வரப்புகளில் களைகள் பரவாமல் தடுக்க களைக் கொல்லி தெளிக்கவும் விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.ஆய்வின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வம், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஜோசப் மரியரெக்ஸ், துணை வேளாண்மை அலுவலர் குருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment