Tuesday, September 29, 2015
விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு என்கிற பேரில் வசூல்
செய்து முறைகேடுகளில் ஈடுபடும் வணிக வரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இது குறித்து சிறுபட்டாசு ஆலை உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி, வணிகவரித்துறை இணை ஆணையாளருக்கு
அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில்
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட
பெரியதும், சிறிதயதும் ஆன பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரித்த பட்டாசுகள்
விற்பனையாகமல் தேக்கம் அடைந்து உள்ளன. இந்நிலையில், வணிகவரித்துறை
அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி முதல் திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய
மாவட்டங்களில் இருந்து சிறப்புக்குழு அமைத்து சிவகாசி பகுதியில் ஆய்வு
செய்கின்றனர். இதில், ஒரு வாகனத்திற்கு 2 வணிகவரித்துறை அதிகாரிகள், ஒரு
ஓட்டுநர் வீதம் 3பேர் வீதம் 4 வாகனங்களில் ஆய்வு செய்கிறார்கள்.
அப்போது, முறையாக பில் போட்டு சரக்கு ஏற்றி வரும்
வாகனங்களையும் ஆய்வு என்கிற பேரில் நீண்ட நேரம் நிறுத்தி காக்க
வைக்கின்றனர். அதேபோல், பில் இல்லாமல் பட்டாசு ஏற்றி வரும் வாகனங்களில்
குறிப்பிட்ட அளவு வசூல் செய்து கொண்டு அனுப்புகின்றனர். அந்த வாகனங்களுக்கு
அபராதம் எதுவும் விதிக்காமல், பெயரளவிற்கு ரசீது மட்டும் போட்டு
அனுப்புகின்றனர்.
இதேபோல், சிவகாசி பகுதியில் உள்ள வணிகவரித்துறை
அதிகாரிகளும் முறைகேடாக வசூலிக்கின்றனர். இதில், வெம்பக்கோட்டை பகுதி
கிராமங்களில் எவ்வித அனுமதியின்றியும் பட்டாசு தயாரித்து விற்பனைக்கு
ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை வசூலித்துக் கொண்டு
அனுப்புகின்றனர். இதேபோல், சாத்தூர் சாலை, வெம்பக்கோட்டை சாலை, விருதுநகர்
சாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகளில் ஆய்வு செய்கின்றனர். இதுபோன்ற
காரணங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், இப்பகுதியில்
ஆய்வில் ஈடுபடும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி வணிகவரித்துறை இணை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர்
தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
0 comments:
Post a Comment