Wednesday, September 30, 2015
By
விருதுநகர்
First Published : 29 September 2015 07:06 AM IST
மழைக்காலங்களில் காய்ச்சல் வந்தால்
உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என
பொதுமக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில்
தொற்று நோய் தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து பேசுகையில்,
இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. அதனால் வீட்டைச்
சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும், டெங்கு
காய்ச்சலை உருவாக்கும் கொசு நல்ல தண்ணீர் மூலமே பரவுகிறது. எனவே வீட்டில்
நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய
வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களுக்குள் கொசுக்கள்
புகாமல் மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புற பகுதியில் தேவையற்ற
மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள்,
கொட்டாங்குச்சிகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன்
மூலம் கொசு உற்பத்தியை தடுக்க முடியும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் துப்புரவு பணியாளர்கள்
ஒவ்வொரு வீடு, வீடாக சென்று வைரஸ் கொசுக்கள் பரவும் வகையில் தண்ணீர்
தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும். அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது
என்பது குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமாக ஆரம்ப சுகாதார
நிலையங்கள் மூலம் எடுத்துக் கூற வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப
சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்
கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவர்களின் அனுமதியில்லாமல்
தானாகவே மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. எனவே பொதுமக்கள் வைரஸ்
காய்ச்சல் குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை, தேவையான மருந்து,
மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார
நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எஸ்.மகேஸ்வரன், திட்ட இயக்குநர் சுரேஷ், மருத்துவத்துறை இணை இயக்குநர்
தங்கசாமி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கலு.சிவலிங்கம்(சிவகாசி),
பழனிசாமி(விருதுநகர்), பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், நகராட்சி
ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள்,
மருந்து கட்டுப்பாடு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment