Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் கொசுக்கடியால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் பிறநோய்கள் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்;ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுவானது பகல் நேரத்தில் கடித்து நோயினைப் பரப்பும் தன்மை வாய்ந்தது. எனவே பகல் நேரம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி அனைத்து மழலையர் , தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 13.10.2015 செவ்வாய்;க்கிழமையன்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவர்களின் உதவியைப் பெற்று இப்பணியினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும்.
பள்ளிகளில் தூய்மைப் பணியினை மேற்கொள்ளும்போது, மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவறை நீர்த்தொட்டிகளை சலவைசோடா (பிளீச்சிங் பவுடர்) கொண்டு நன்கு கழுவி காயவைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கப்படும் நீர்நிலைத் தொட்டிகள் சரியாகப் பொருந்தும் மூடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகம் , சத்துணவு மையம் மற்றும் விடுதி அருகே பயன்படுத்தப்பட்டு களையப்பட்ட குவளைகள், பிளாஸ்டிக் பைகள் , தேங்காய் சிரட்டைகள் இருப்பின் அவற்றினை அகற்றிட வேண்டும். வளாகத்தில் உள்ள புதர்களில் கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பயன்பாட்டில் இல்லாத பழைய வாளிகள், கொள்கலன்கள், டப்பாக்கள் மற்றும் டயர்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாணாக்கர் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தற்போது எடுப்பது போன்று உறுதிமொழியினை தொடர்ந்து எடுத்திட வேண்டும். மழைக்காலங்களில் மாணவ , மாணவிகள் ஈ மொய்த்த பண்டங்கள் உண்ணக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் பரவும் விதம் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment