Wednesday, November 11, 2015
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு ஊராட்சி புனித அந்தொனியார் மேல்நிலைப்பள்ளி 07.11.2015 சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற மிஷன் இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது.
மிஷன் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சுற்றுக்களாக அக்டோபர்இ நவம்பர்இ டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2016 வரை தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வார நாட்களில் நடைபெறுகிறது. அக்டோபர் மாத முதல் சுற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6580 குழந்தைகளுக்கும், 394 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம்; சுற்று நவம்பர் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 2 வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடாமல் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்குமான சிறப்பு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் முகாம் 2015 அக்டோபர் 7ம் தேதி முதல்; ஜனவரி 2016 வரை 2ம் கட்டமாக 16 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள,; 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 253 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக தடுப்பூசி மையம் நிறுவப்பட்டு கிராம சுகாதார செவிலியர், நகர்ப்புற சுகாதார செவிலியாகள் மூலம் தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையம் காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை செயல்படும். கர்ப்பிணிகளுக்கும் மற்றும் 2 வயது வரை தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம். நடமாடும் தடுப்பூசி வழங்கும் மருத்துவ குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர்
.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்ணிகள்) மரு.ச..உமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...

0 comments:
Post a Comment